Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2019 23:42:54 Hours

யாழ் நாகர்கோவில் வித்தியாலயத்தில் 55ஆவது படையினரால் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப் பிரிவினரால் 306/சி கொழும்பு கோட்டையில் உள்ள லயன்ஸ் கழகத்தினரின் அனுசரனையில் யாழ் நாகர்கோவில் வித்தியாலயத்தின் 218 மாணவர்களுக்கு பணப் பரிசில்கள் பாடசாலை உபகரணப் பொருட்கள் தளபாடங்கள் மற்றும் கல்வியியல் சாதணங்கள் போன்ற சுமார் லட்சக்கணக்கு மதிப்பிலான பொருட்கள் போன்றன கடந்த சனிக் கிழமை (02) பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்விற்கான நன்கொடைகள் இப் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்தின அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க லயன்ஸ் கழகத்தினரால் வழங்கப்பட்டதுடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது. மேலும் இவ்வாறான பல உதவித் திட்டங்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தளபதியான மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டதுடன் லயன்ஸ் கழகத்தினர் 55ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியவர்கள் போன்றோர் கலந்து கொண்டதுடன் பாடசாலை பேண்ட் வாத்தியக் குழுவினரால் இவ் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். Running sports | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ