Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2019 14:01:32 Hours

கடற்படை அதிகாரிகள் கல்வி சுற்றுலா நிமித்தம் பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கை கடற்படை (மெரிடயிம்) எகடமியில் பயிற்சி பெறும் 20 கடற்படை அதிகாரிகள் தம்புள்ளையில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்திற்கு இம்மாதம் (24) ஆம் திகதி கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

இங்கு வருகை தந்த கடற்படை அதிகாரிகளை பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்தின் பிரதி கட்டளை தளபதி லெப்டினன்ட் கேர்ணல் கே.கே.எஸ் பெரகும் அவர்கள் வரவேற்றார். பின்பு இவர்களுக்கு பொறிமுறை காலாட் படையணியின் செயற் பொறுப்புக்கள் தொடர்பான விளக்கத்தை அளித்தார்.

அதன் பின்னர் இந்த படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பதவி நிலை அதிகாரி மேஜர் அசங்க விமலவீர அவர்களினால் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை படைப்பிரிவின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் இராணுவத்திற்கான அதன் முக்கியத்துவம் தொடர்பான விளக்கங்கள் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் இந்த கடற்படை அதிகாரிகளினால் படைத் தலைமையக வளாகத்தினுள் இருந்த கனரக கவச வாகனங்களை பார்வையிட்டு விளக்கங்களையும் அறிந்து கொண்டனர்.affiliate tracking url | adidas Yeezy Boost 700 , Ietp