Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th January 2019 10:48:23 Hours

இராணுவ புலனாய்வு படையணியின் 26 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவத்திலுள்ள இராணுவ புலனாய்வு படையணியின் 26 ஆவது ஆண்டு நிறைவு விழா அம்பலாங்கொடை கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படைத் தலைமையகத்தில் (25) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டு இந்த நிகழ்விற்கு வரவேற்கப்பட்டார். அத்துடன் இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அம்மையார் அவர்களையும் இராணுவ புலனாய்வு சேவா வனிதா பிரிவினரால் வரவேற்கப்பட்டார்.

பின்னர் தேசிய, இராணுவ கீதங்கள் இசைக்கப்பட்டு சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவதாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை கௌரவித்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி அவர்களினால் இராணுவ புலனாய்வு படையணியை ஆரம்பித்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல அவர்களையும் சந்தித்தார். பின்பு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த இராணுவத்தினருக்காக தலைமையக்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிகளுக்கு அருகாமையில் சென்று மலரஞ்சலி செலுத்தி அவர்களை நினைவு கூர்ந்தார். அத்தருணத்தில் இராணுவத்தினரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து இந்த அஞ்சலிகளை செலுத்தினார்கள்.

மேலும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல அவர்கள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் பிரிகேடியர் எச்.கே.ஏ.சி.ஆர் கொடிதுவக்கு அவர்களினால் நினைவு தூபிக்கு அருகாமையில் அழைத்து சென்று முன்னாள் இராணுவ தளபதி அவர்களினால் விளக்குகள் ஏற்றப்பட்டு அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் பி பல்லேகல, ஓய்வு பெற்ற அதிகாரிகளான மேஜர் ஜெனரல் எஸ்.டீ தென்னகோன், மேஜர் ஜெனரல் ஏ.எஸ்.எம் சகீர், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் சுதந்த சமரசிங்க, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர போன்ற அதிகாரிகளும், இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, பிரிகேடியர் என்.கே.எல்.எஸ்.ஆர் டயஸ், உயரதிகாரிகளின் பாரியார்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இணைந்திருந்தனர்.best Running shoes | nike