Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2019 10:40:33 Hours

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்கவிற்கு தமது படையணியினால் கௌரவ மரியாதைகள்

இலங்கை இராணுவத்தில் புதிதாக மேஜர் ஜெனரல் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்களிற்கு குருவிடையில் அமைந்துள்ள அவரது கெமுனு காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

கெமுனு காலாட் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்களை கெமுனு காலாட் படையணி தலைமையகத்தின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கே பிரேமதிலக அவர்களினால் வரவேற்கப்பட்டு பின்னர் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

பின்னர் படைத் தலைமையக அதிகாரி விடுதியில் இந்த உயரதிகாரிக்கு பிரியாவிடை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதன் இறுதியின் போது கெமுனு காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால் நினைவுச் சின்னமும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்கள் இலங்கை இராணுவத்தில் பயிற்சி இலக்கம் 22 இன் கீழ் கெடெற் அதிகாரியாக 1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இணைந்தார். பின்னர் பயிற்சி நிறைவின் போது இலங்கை இராணுவத்தின் 4 ஆவது கெமுனு காலாட் படையணியில் இணைந்து கொண்டார். அதன் பின்னர் இவர் 6, 8 ஆவது பெமுனு காலாட் படையணிகளில் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Adidas shoes | Klær Nike