Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2019 12:20:14 Hours

நாலந்தா பாடசாலை சங்கம் மற்றும் ஹேமாஷ் அவுட்ரீச் மன்றத்தினால் வன்னி பிரதேச மாணவர்களுக்கு உதவிகள்

கொழும்பு நாலந்தா கல்லூரி ‘83’ ஆவது பிரிவைச் சேர்ந்த பழைய மாணவர் சங்கத்தின் அனுசரனையில் 56 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வன்னிப் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் 11 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு 54 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக இம் மாதம் (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேஜர் ஜெனரல் தெமடம்பிடிய அவர்களது தலைமையில் நாலந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அனுசரனையில் இந்த நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன. மேஜர் ஜெனரல் தெமடம்பிடிய அவர்கள் நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வவுனியா தெற்கு கல்வி வலய பணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன, வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் செல்வி அண்ணமலர் சுரேந்திரன், மாகாண கல்வி உயரதிகாரி திரு. ஆர் விஜயசிங்க, வவுனியா கனகராயங்குளம் பாடசாலையின் உப அதிபர் திரு டி சுகந்தன் அவர்கள் பங்கு பற்றிக் கொண்டனர்.

மேலும் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களது தலைமையில் ‘ஹேமாஷ் அவுட்ரீச் மன்றத்தின் அனுசரனையில் ‘பியவர’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மஹாகச்சகொடிய செல்லலிஹினிகம முன் பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக (10) ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் ‘பியவர’ முன் பள்ளி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பண்டவெவ திவ்ய உதய முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் நன்கொடையாக இம் மாதம் (7) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஹேமாஷ் லங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளர் திருமதி சிரோமி மாஷக்கோரல, ஹோமாஷ் லங்கா நிறுவனத்தின் பிரதான நிருவாக அதிகாரி திரு ஸ்டீபன் என்டர்ப், திவ்ய உதய முன்பள்ளியின் அதிபர் பண்டாரவெவ அவர்கள் இணைந்திருந்தனர்.Running Sneakers | jordan Release Dates