Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2019 16:37:00 Hours

விஜயபாகு காலாட் படையணியின் போர் வீரர்களது பிள்ளைகளுக்கு உதவிகள்

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது வழிக் காட்டலின் கீழ் விஜயபாகு காலாட் படையணி சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் இந்த படையணியைச் சேர்ந்த போர் வீரர்களது பாடசாலை செல்லும் மாணவர்கள், மாணவிகள் 162 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அத்துடன் அவயங்களை இழந்த இராணுவ போர் வீரர்கள் 13 பேருக்கு செயற்கை உறுப்புக்கள் இந்த நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இதன் பெறுமதி 1.5 மில்லியன் ரூபாவாகும்.

இந்த நன்கொடைகள் பிரேயில் கல்வி நிறுவனத்தின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டது. jordan release date | Air Jordan