Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2019 20:40:33 Hours

முல்லைத்தீவு , யாழ் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரது ஒத்தழைப்புடன் உதவிகள்

தெற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பன்னிப்பிடிய தர்மபால வித்தியாலய அதிபர்களது பங்களிப்புடன் முல்லைத்தீவு செம்மலை மஹா வித்தியாலயத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 220 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக (16) ஆம் திகதி புதன் கிழமை வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக்கருவிற்கமைய 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் கேர்ணல் லங்கா அமரபால அவர்களது தலைமையில் இந்த பணிகள் இடம்பெற்றது.

மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் குறைந்த வருமானத்தை பெறும் யாழ் பாடசாலை மாணவர்கள் 250 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள தொல்புரம் ஏஎம்டிஎம் பாடசாலை, விக்நேஸ்வரா பாடசாலை, சுலிபுரம் விக்டோரியா கல்லூரி, முளை சைவப்பிரஹாஷம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு காக்கைதீவு மற்றும் தொலபுரம் சமூக நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

‘பூசத் சமாஜ சத்கார பதன’ அமைப்பு, மற்றும் நயிலிய புகையிரத நிலையத்தின் அதிபர் திரு சந்தன திலகசிரி மற்றும் திரு ரவீந்திர திசாநாயக அவர்களது அனுசரனையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் பிரியந்த கமகே அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.bridge media | Nike