Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2019 16:27:47 Hours

இராணுவத் தளபதியவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை விதிமுறைக் கோவை

2019ஆம் ஆண்டிற்கான புதிய ஆரம்பத்தில் இராணுவ நிறைவேற்று ஜெனரலாக காணப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (01) இராணுவ சீருடை விதிமுறைகள் அடங்கிய நூலை (Pயசவ ஐ ரூ ஐஐ) இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கு இராணுவத் தளபதியவர்களின் காரியாலயத்தில் வழங்கி வைத்தார்.

அந்த வகையில் இப் புதிய சீருடை அமைப்பானது நிறைவேற்று ஜெனரலாக காணப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் தேவிந்த பெரேரா அவர்களின் கண்காணிப்பில் நிர்வாக பணிப்பகத்தால் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 1992ஆம் ஆண்டில் காணப்பட்;ட சீருடை அமைப்பின் பின்னர் காணப்பட்ட புதிய சீருடை அமைப்பு பதக்கங்கள் இராணுவ சின்னங்கள் போன்றவற்றின் விதிமுறைகள் மற்றும் நிகழ்வுகளுக்கான சீருடை அமைப்பு போன்ற புகைப்படங்கள் அடங்கிய நூலானது தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் போது இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் நிர்வாக பணிப்பாளர் அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார். Authentic Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov