Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2018 17:12:59 Hours

கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குரல்

கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தமது பிரதேசங்களில் காணப்பட்ட வெள்ளப் பெருக்கின் போது உதவிகளை வழங்கிய இராணுவத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும் இராணுவத்தினரின் மனிதாபிமான சேவை தமக்கு தேவை எனும் கருத்துப் பொறிக்கப்பட்ட பதாதைகள் ஒட்டுசுட்டான் வசந்திபுரம் பந்தராவனி மண்டகண்டல் பேராறு உடையார்கட்டு குளம் தெற்கு சுகந்திபுரம் தர்மபுரம் வட்டகச்சி வாழைக்குளம் தேராவில் இரட்டைமடு வள்ளுவர்புளம் போன்ற பிரதேசங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆந்த வகையில் தினக்குரல் மற்றும் தமிழ்மிரர் போன்ற தமிழ் பத்திரிகைகளில் மற்றும் சிங்களப் பத்திரிக்ககைளான திவயின மவுபிம போன்ற பத்திரிக்ககைளில் பிரசுரிக்கப்பட்ட இப் பதாதைகள் (இராணுவத்தினர் வெள்ள நிவாரணத்தின் போது வழங்கிய உணவுப் பொதியின் பைகளில் பொறிக்கப்பட்டு காணப்பட்டுள்ளது) மேலும் சில வெண்நிற மட்டைகளில் இராணுவத்தினர் தம்மை வெள்ள அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றினர் இராணுவத்தினர் இல்லாவிடின் எமது நிலைமை என்ன? நாங்கள் மேலும் இராணுவத்தினரின் சேவையை விரும்புகின்றோம் எமக்கு தமிழ் அரசியல் வாதிகள் எவரும் உதவவில்லை என பல விடயங்களை உள்ளடக்கிய பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றன அங்காங்கே காணப்பட்டது.

மேலும் சில சுவரொட்டிகள் பாரிய அளவிலான கணக்கு பட்டியல் மற்றும் வட மாகான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களில் எழுதிப் பொறிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வட மாகான ஆளுனரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் திரு எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் சதிக அருண எனும் பத்திரிகையில் இராணுவத்தினர் வடக்கில் இருந்து வெளியேறுமேயானால் பாரிய பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார். மேலும் வெள்ள அனர்த்தத்தின் போது இராணுவத்தினரின் சேவையை நான் பாராட்டுகின்றேன் எனவும் அவர் மேலும் இப் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். Sneakers Store | Women's Designer Sneakers - Luxury Shopping