Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2018 19:18:54 Hours

பல அம்சங்களுடன் யாழ் முல்லைத்தீவு, வன்னி, மத்திய, மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நத்தார் பண்டிகை நிகழ்வுகள்

நாடலாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை கொண்டாடும் நிமித்தம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம், படைப் பிரிவுகள், படைத் தலைமையங்கள், பயிற்ச்சி முகாம்கள், முன்ரங்க பாதுகாப்பு படைத் தலைமையங்கள் போன்றன மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேலும் மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் கரோல் கீதங்கள் மருத்துவ தேவை மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றவை வழங்கும் நிகழ்வுகளை மேற் கொண்டனர்.

அந்த வகையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 522 ஆவது படைப் பிரிவு மற்றும் 523 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 52 ஆவது படையினர் இணைந்து கடந்த (23) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தென்னிந்திய தேவாலயத்தில் நத்தார் பண்டிகையை கொண்டாடினர். அத்துடன் 12 ஆவது கெமுனு ஹேவா படையணியுடன் இணைந்து 4 ஆவது விஜயபாகு காலாட்படையணியின் படையினரால் 11 தேவாலயங்களில் 142 சிறுவர்களின் ஒத்துழைப்புடன் கெரோல் கீதங்கள்,நாடகங்கள், மற்றும் நடனம் போன்ற அம்சங்களுடன் பல நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தனர். அதன்படி இந் நிகழ்விற்கு இராணுவப் பேண்ட் மற்றும் பல்வேறு இராணுவ கால்ப்ஸசோ அணியினரால் இசை வழங்கப்பட்டன. அத்துடன் இராணுவத்தின்ரின் ஆதரவுடன் 5 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேவாலயங்களின் 36 அருட்தந்தைகள் மற்றும் பாதிரியார்கள், யாழ்ப்பாண திருச்சபை, தென்னிந்திய திருச்சபையின் தந்தையான ஜெயனிசம் மற்றும் பாப்டிஸ்ட் திருச்சபையின் தந்தை மூர்த்தி ஆகியோருடன் ஒருங்கிணைந்து இந் நத்தார் பண்டிகையை கொண்டாடினர்.

இந் நிகழ்விற்கு வெவ்வேறு மதங்களின் மதகுருமார்கள், இராணுவ படையினர, அரச அதிகாரிகள், தனியார் நிறுவன அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதற்கு முன்னதாக, யாழ் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் இப் பிரதேசத்தில் ஊனமுற்றோர்களை பாரவையிட்டதன் பின்னர் அவர்களுக்கு சக்கர நாட்காலிகள் நன்கொடையாக வழங்கினார்.

இதற்கிடையில், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் கிறிஸ்மஸ் தினத்தன்று (25) ஆம் திகதி இனியா வாழ்வுல்லம் (Home for Happy Living) இல் வசிக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பொதிகள் மற்றும் உணவு வகைகள் வழங்கினர். அதன் படி இவ் இல்லத்தில் காது கேட்காமல் மற்றும் பார்வை குறைபாடுகள் உள்ள 27 குழந்தைகளுக்கு இசை பாடல்கள் மற்றும் விளையாட்டு பொம்மைகள் மற்றும் மதிய உணவுகளுடன் சாப்பாட்டுடன் செண்டா அவர்களின் வருகையும் இந் நிகழ்வில் மிகவும் சிறப்பாக அமைந்தது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் பிரிகேடியர் கீர்த்தி கோஸ்டா அவர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினார். அதேபோல் கிறிஸ்துமஸ் தினத்தன்று படையினரால் கோப்பாவில் கிராம மக்களுக்கு மதிய உணவுகளும் வழங்கப்பட்டன.

இதற்கிடையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 64 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜயனத் ஜயவீர அவர்களின் மேற்பார்வையின் கீழ் கிறிஸ்மஸ் மரம் மற்றும் பல அலங்காரங்கள் அமைத்தன. இதேபோல் 64ஆவது படைப் பிரிவுகளின் கீழ் இயங்கும் 641 ஆவது படைப் பிரிவினரால் இப் பிரதேசத்தில் உள்ள அன்பு சிறுவர் இல்லத்தின் 17 குழந்தைகள் மற்றும் 6 ஊழியர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், மதிய உணவுகள் மற்றும் பரிசு பொதிகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய வன்னி பிரதேசத்தின் அனைத்து சமூகங்களுக்கும் மத்தியில் சமாதானத்தையும் சமரசத்தையும் சித்தரிக்கும் நிமித்தம் வன்னி பாதகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 61 ஆவது படைப் பிரிவின் 613 ஆவது படைப் பிரிவினரால் மடு தேவலயத்தின் மடு சாலையில் ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டன. அதன் படி 61 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.டி.சி.ஜி.ஜே. திலகரத்ன அவர்களின் ஆலோசனைக்கமைய கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பிற அலங்காரங்கள் 613 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 24 ஆவது கஜபா படையணியின் படையினரால் அலங்கரிக்கப்பட்டன. அதற்கமைய வன்னி பிரதேசத்தில் அனைத்து கிறிஸ்மஸ் அலங்காரங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இடம் பெற்றன.

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ருவான் டி சில்வா அவர்களுடன் படையினர்கள், அனைத்து கிளைகள் மற்றும் துறைகளுடன் இணைந்து பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் மற்றும் மற்றும் அனைத்து படையினர்களுடன் கடந்த (25) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நத்தார் பண்டிகையை கொண்டாடின.

அத்துடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிவில் வீரசிங்க அவர்களின் ஆலோசனைக்கமைய 221 ஆவது படைப் பிரவின் கட்டளை தளபதி பிரிகேடியர் உபாலி குணசேகர அவர்களின் ஏற்பாட்டில் 22 ஆவது படைப் பிரிவு மற்றும் திருக்கோணமலை பிரதேசத்தின் கத்தோலிக்க சங்கத்தினர் ஒன்றிணைந்து கடந்த (25) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நத்தார் பண்டிகையை லேடி ஒப் குடலுப் தேவாலயத்தில் கொண்டாடின. இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக திருக்கோணமலை அருட்தந்தையான வைத்தியர் நொயல் இமானுல் அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிழக்வானது 22ஆவது படைப் பிரிவினரின் ஆலோசனையின் கீழ் அனைத்து படைப் பிரிவுகளின் பங்கழிப்புடன் இப்பிரதேசத்தில் உள்ள மாணவர்களால் சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும் அடையாளமாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில போன்ற மும் மொழிகளிலும் கரோல் கீதங்கள் பாடியதுடன் பெரும் திரலான மக்களுடன் அந்தி பொழுதில் வாணவேடிக்கைகளின் வண்ணமயமான காட்சியும் மெருகூட்டியது.

மேலும் கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் கிரிப்ஸ் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் இடம்பெற்றதுடன் ஒரு கிறிஸ்துமஸ் மண்டலம் திருகோணமலை நகரில் அமைக்கப்பட்டன.அத்துடன் கிறிஸ்மஸ் தினத்தன்று திருகோணமலையின் அருட்தந்தை திருமதி நோல் இமானுவேல் திருமதி. ஒரு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட செண்டா கிளாஸ் அவர்களால் பண்டிகைகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கின.அதற்கமைய திருகோணமலை பொலிஸ் பிரிவானது கிறிஸ்துமஸ் கரோல் பகுதிக்கு சுற்றுப்பயணம் ஏற்பாடகளையும் மேற்கொண்டன. bridge media | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes