Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2018 01:56:00 Hours

118புதிய வீடுகள் நிர்மானிக்கப்பட்டு படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தாரிற்கு கையளிப்பு

யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ படையினர் மற்றும் படையினர்களின் குடும்பத்தினருக்கு தளபதியவர்களின் விசேட திட்டத்தின் கீழ் 118 புதிய வீடுகள் நிர்மானிக்கப்பட்டதுடன் இராணுவத்தில் ஓய்வு பெற்pற 147படையினருக்கு தேசிய பயிற்றுவிப்பு தகமைக்கான பயிற்சிகள் மற்றும் அப் பயிற்சிகளின் நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அந்த வகையில் கல்குலமயில் அமைந்துள்ள கன வாகனங்களுக்கான பயிற்சி நெறிகளை இப் படையினர் மேற்கொண்டதோடு கடந்த புதன் கிழமை(19) இப் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு – 02இல் உள்ள பாதுகாப்பு சேவைக் கல்லூரியில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் வரவேற்றதுடன் பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண இராணுவ தொண்டர் படையணியின் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அத்துடன் சிவில் தொடர்பாடல் இணைப்பாளரான பிரிகேடியர் என் கே வடுகொடபிட்டிய போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் 118புதிய வீடுகள் இராணுவப் படையினர்களுக்கு இராணுவத் தளபதியவர்களின் விசேட வீட்டுத்திட்டத்திற்கு அமைவாக மூன்று மற்றும் நான்கு பகுதிகளில் வழங்கப்பட்டது. இதன் போது இப் புதிய வீட்டிற்கான திறப்புகள் மற்றும் 15 000 பணப் பொதிகள் போன்றன வழங்கப்பட்டதுடன் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் இராணுவ கீதமும் இசைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த படையினருக்கான மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சிவில் தொடர்பாடல் இணைப்பாளரான பிரிகேடியர் என் கே வடுகொடபிட்டிய அவர்களால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 147படையினருக்கு தேசிய பயிற்றுவிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் கல்குலமயில் அமைந்துள்ள கன வாகனங்களுக்கான பயிற்சி நெறிகளை மேற்கொண்ட படையினருக்கான சான்றிதழ்களை தேசிய பயிற்றுவிப்பு மையத்;தின் தலைவரான வைத்தியர் சாரங்க அழகப்பெரும போன்றோர் வழங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பதவிநிலைப் பிரதானியவர்களால் வைத்தியர் சாரங்க அழகப்பெரும அவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. ஆணைச்சீட்டு அதிகாரி – 2 விசேட படையின என் பி பி என் ஏ ரணசிங்க அவர்களால்; தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. Nike sneakers | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth