Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2018 09:03:41 Hours

படையினரால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் 45.28 பரப்பு காணிகள் விடுவிப்பு

நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை நோக்கில் கொண்டு கிளிநொச்சி இராணுவத்தினரால் தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்கும் நிகழ்வானது கடந்த புதன் கிழமை(19) இடம் பெற்றது. அந்த வகையில் வடக்கில் கராச்சி கண்டவெளி புதுக்குடியிருப்பு மற்றும் துனுக்காய் போன்ற பிரதேசங்களில் படையினரால் பயன்படுத்தப்பட்ட காணப்பட்ட 45.28 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேர அவர்கள் இக் காணிப்பத்திரங்களை கிளிநொச்சி பிரதேச செயலாளரான திரு எஸ் ஆறுமணியம் மற்றும் முல்லைத்தீவு பிரதேச செயலாளரான திருமதி ஆர் கேதீஸ்வரன் போன்றோரிடம் கையளித்தார். இந் நிகழ்வானது கிளிநொச்சி ஹார்மணி நிலையத்தில் இடம் பெற்றது.

மேலும் 45.28 ஏக்கர் மற்றும் கராச்சி மாவட்ட செயலகத்தின் 35.95மற்றும் கண்டாவெளி பிரதேசத்தின் 04 ஏக்கர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 05 ஏக்கர் காணிகள் துனுக்காய் பிரதேசத்தில் 0.33 ஏக்கர் போன்ற தனியார் காணிகள் அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் வசந்த குமரப்பெரும 66ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் தீப்த்தி ஜயதிலக போன்றோர் கலந்து கொண்டனர். Best jordan Sneakers | Air Jordan