Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2018 18:21:24 Hours

குச்சவெளியில் முப்படைகளின் இறுதி கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கைகள்

இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளின் தாக்குதலுக்கு முகமளிப்பது தொடர்பான தாக்குதல்களை உள்ளடக்கி 2018 ஆம் ஆண்டிற்கான கூட்டுப்படை அப்பியாச பயிற்சிகள் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் (26) ஆம் திகதி பகல் இடம்பெற்றது.

இந்த வருடத்தின் கூட்டுப்படை அப்பியாச பயிற்சியின் இன் இறுதி கட்டத்தின் 'விமர்சனரீதியான ஈடுபாடு' என வரையறுக்கப்படும் தொழில்நுட்ப ரீதியாக, எதிரி மறைவிடங்களை கண்காணித்து பல-முனைகளிலிருந்து கூட்டுப் படை தாக்குதல் எவ்வாறு மேற்கொள்ளுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சிகளில் இலங்கையிலுள்ள 2500 இராணுவத்தினரும், 400 கடற்படையினரும், 200 விமானப்படையினரும் பங்கேற்றனர். அத்துடன் 19 வெளிநாட்டைச் சேர்ந்த 64 படையினரும் இந்த பயிற்சியில் ஈடுபட்டனர்.

சீனா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம், துருக்கி, இந்தோனிஷியா, நைஜீரியா,நேபாளம், சூடான் மற்றும் சாம்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்த படை வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மூன்று கிழமை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன அவர்களும், அதிதிகளாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் முப்படை தளபதிகளும் வருகை தந்தனர்.

கூட்டுப்படை பயிற்சியின் போது கொமாண்டோ படையணி, விஷேட படையணி உட்பட காலாட் படையணிகளும், எம்ஐ 24 மற்றும் மிஹ் ஹெலிகொப்டர்கள் , கடற்படைக்கு சொந்தமான தாக்கும் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன.

கூட்டுத் திறனைப் பகிர்ந்துகொள்வது, கூட்டு இயல்பில் 'உட்புற இயல்பில்' ஈடுபடுவது, சிக்கலான சூழல்களை அனுபவித்தல், சித்தரிக்கப்பட்ட சூழல்களின் கீழ் கட்டளைகளை மேற்கொள்ளல், பல்வேறு ஆயுதங்கள், இராணுவ தத்துவத்தை புரிதல், சிறப்பு நடவடிக்கைகளில் போர் அடிப்படைகளை செயல்படுத்துதல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த கூட்டுப்படை பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

கூட்டுப்படை அப்பியாச பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் இந்த நிகழ்வின் போது தனது சிறப்புரையை அதிதிகளுக்கு முன்பாக ஆற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் செய்தி உரை இராணுவ சிரேஷ்ட அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சில்வெஸ்டர் பெரேரா அவர்களினால் உரைக்கப்பட்டன.

இந்த ஆண்டின் கூட்டுப்பயிற்சியானது மிகவும் நவீனமானது. ஒரு கருதுகோள் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு, நடவடிக்கைகளுக்கான வலை GIS மென்பொருள், உடற்பயிற்சி, Improvised Digital Bird Tables மற்றும் ஸ்மார்ட் போர்டுகள், தனி கூட்டு நடவடிக்கைகள், கூட்டு இரவு நடவடிக்கைகள், அதே பகுதியில் ஸ்பெஷல் ஃபோர்ஸ் மற்றும் கமாண்டோக்கள் நடத்திய செயல்பாடுகள் மற்றும் பரிசூட் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டன.

கூட்டுப்படை பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி அவர்களது தலைமையில் இடம்பெற்றன. இந்த பயிற்சிகள் கொமாண்டோ படையணியின் பிரிக்கட் தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த ஞானரத்ன மற்றும் விஷேட படையணியின் பிரதிக் கட்டளை தளபதி கேர்ணல் உபுல் இகலஹே அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

27 ஆம் திகதி இந்த பயிற்சிகள் நிறைவடைந்தன. Buy Kicks | Nike Dunk - Collection - Sb-roscoff