Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th September 2018 23:14:04 Hours

இராணுவத்தினரால் பிலியந்தலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

இலங்கை இராணுவ சேவா வனிதாப் பிரிவினர் கொழும்பு ரோயல்ட்டி லயன்ஸ் கழகத்தினரருடன் இணைந்து இக் கழகத்தினரின் அனுசரனையுடன் புத்தளம் மாவட்டத்தில் காணப்படுகின்ற ஆணமடுப் பிரதேச பிலியகாம சாரிபுத்த வித்தியாலய மாணவர்களுக்கு தமது கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 1மில்லியன் ருபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இசை வாத்தியக் கருவிகள் விளையாட்டு உபகரணங்கள் கனணி தொழில்நுட்ப கருவிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் போன்றன இன்று காலை (25) வழங்கப்பட்டது.

அந்த வகையில் தேர்தெடுக்கப்பட்ட 34 மாணவர்களுக்கு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் இராணுவ சேவா வணிதாப் பிரிவின் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க அவர்கள் இணைந்து இப் பாடசாலையின் முன்னால் மாணவரும் இராணுவத் தலைமையக ஆணைச் சீட்டு உத்தியோகத்தர் - 1 அதிகாரியான எஸ் ஜயந்த (ஓய்வு) அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இவ் உபகரங்களை வழங்கி வைத்தனர்.

மேலும் இத் தேவைகளை கண்டறிந்த லெப்டினன்ட் கேர்ணல் நலிந்த மஹாவிதான அவர்கள் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் - 1 மற்றும் இராணுவ சேவா வணிதாவுடன் இணைந்து ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் ருபா 200 000 பெறுமதியான விஞ்ஞான ஆய்வூகூட பொருட்கள் மற்றும் இணைய வசதிகளுடன் கனணி உபகரணப் பொருட்கள் போன்றன வழங்கப்பட்டதுடன் ருபா 1500 பெறுமதியான புலமைப் பரிசில்களும் 3வருடத்திற்கு கீழ்பட்ட விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இராணுவ சேவா வணித பிரிவினரால் இசைக் கருவிகள் போன்றன வழங்கப்பட்டன.

அந்த வகையில் இந் நிகழ்வில் இரு தென்னை மரக்கன்றுகள் வீதம் 100 பேரிற்கு வழங்கப்பட்டது. (200 கன்றுகள்) இராணுவத்தினால் இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற துருலிய வெனுவென் அபி எனும் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டதுடன் தென்னை அபிவிருத்தி சங்கமானது இராணுவத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் லயன்ஸ் கழகம் வலயக் கல்விப் பணிப்பக அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். Best Authentic Sneakers | Nike Air Max 270