Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st September 2018 22:09:12 Hours

தளபதியவர்கள் புதிதாக ஜெனரல் பதவியுயர்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்து

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதிதாக ஜெனரல் பதவியுயர்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை இராணுவத் தலைமையகத்திற்கு வரவழைத்து தமது வாழ்த்துக்களை கடந்த சனிக் கிழமை (1) இடம் பெற்ற சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் பதவியுயர்வு பெற்ற அதிகாரிகளான மேஜர் ஜெனரல் டீ ஜெ ஐ பி கமகே கஜபா தலைமையம் மேலான்மைப் பணிப்பாளர்

இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் மேஜர் ஜெனரல் எச் ஆர் விக்கிரமசிங்க இராணுவ வைத்தியசாலையின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி இலங்கை இராணுவ இலேசாயுத காலாட்டைப் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜெ ஆர் அம்பேமொஹொத்தி அத்துடன் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் எம் மனதுங்க பதிவி உயர்வு பெற்றதுடன் இவர் 2000ஆம் ஆண்டு ரணவிரு வள மையத்தில் கடமையில் இருந்த வேளை பயங்கரவாதிகளால் தாங்கப்பட்டு அங்கவீனமுற்றார்.

அந்த வகையில் இப் புதிய பதியேற்ற இலங்கை சமிக்ஞைப் படையணி மேஜர் ஜெனரல் டீ ஏ பி என் தெமடன்பிட்டிய அவர்கள் இராணுவத் தளபதியவர்களை காலை (1)திகதியன்று சந்தித்து ஆசீகளைப் பெற்றார். இவர்கள் அனைவரும் இராணுவத் தளபதியவர்களை சந்தித்ததுடன் அத்துடன் இராணுவ நிர்வாக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் தேவிந்த பெரேரா அவர்களும் காணப்பட்டார்.

அந்த வகையில் இராணுவத் தளபதியவர்களின் பரிந்துரையின் கீழ் முப்படைத் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இவ் அதிகாரிகள் ஐவரும் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதியன்று பதவியுயர்வு பெற்றனர்.

அந்த வகையில் மேற்கூறப்பட்ட அதிகாரிகளுள் நால்வர் யூத்த காலத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது எல்ரீரிஈ யினருக்கு எதிராக போரிட்டு காயமுற்றதன் நோக்காக பதவியுயர்வு பெற்றனர். மேலும் இராணுவத் தளபதியவர்கள் இவ் அதிகாரிளை வாழ்த்தி இராணுவத்திற்கு மென்மேலும் இவ்வாறான சிறந்த சேவையை வழங்குமாறு தெரிவித்தார். latest Nike release | New Releases Nike