Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2018 17:02:25 Hours

லெபனானில் ஐக்கிய நாடுகள் சமாதான நடவடிக்கை பணிகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினர்களுக்கு பதக்க விழா

லெபனானில் ஐக்கிய நாடுகள் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை படையினருக்கு பதக்கம் வழங்கி வைக்கும் அணிவகுப்பு நிகழ்வு (22) ஆம் திகதி நெகுரா லெபனானில் உள்ள (UNIFIL) தலைமையகத்தில் இடம்பெற்றன

இலங்கை இராணுவத்தின் லெபனான் சமாதான நடவடிக்கை பணிகளின் கட்டளை அதிகாரி அவர்களின் அழைப்பையேற்று இந்த பதக்க விழாவிற்கு UNIFIL பிரதி படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிவராம் கரேல் அவர்கள் வருகை தந்தார்.

அத்துடன் லெபனானிற்கான இலங்கை தூதரகத்தின் தூதுவர் திருமதி விஜயரத்ன மென்டிஸ். பிரதி மிஷன் தலைவர் இம்ரான் ரிஷா, லெபனான் பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்கள் வருகை தந்தார். இவரை இலங்கை சமாதான நடவடிக்கை படையின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சிந்தக ராஜபக்‌ஷ அவர்களினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார்.

பதக்கமளிப்பு விழாவில் இலங்கை கலாச்சார நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றன. அத்துடன் இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பு கண்காட்சிகளும் இடம்பெற்றன.

UNIFIL மிஷன் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்டீபனோ டெல் கோல், அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி பியல் விக்கிரமரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடலையும் மேற் கொண்டார். இச்சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டது. Nike Sneakers Store | Nike Running