Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

12th February 2018 21:59:51 Hours

இராணுவத்தினால் குறைந்த வருமானத்தை பெறும் மாணவர்களுக்குநன்கொடைகள்

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பத்தைச் சேர்ந்த150 பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு (11) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விஸ்வமடு மத்திய கல்லூரி மண்டபத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களது பணிப்புரைக்கமைய 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த நன்கொடை பணிகளை கொழும்பிலுள்ள வென்ச்சர் மார்க் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் கிருஷ்ணசாமி கனகராசா மற்றும் அமெரிக்க ஹோட்டல்நிர்வாக இயக்குனரான துஷ்யந்தவுடன் இணைந்துகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில்இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும்அனுசரனையாளர்களான வி. மனோகரன், சிவகோணேசன் மற்றும் கே. ரத்யா அவர்களின் அனுசரனையில் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு குடிநீர் வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த நீர் சுத்திகரிப்பு பணிகள் 572 படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும்6 வது இலங்கை சிங்கப் படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிருஸ்ணசாமி கணகராஜா அவர்கள் வருகை தந்தார். மேலும் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, 572 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் லால் விஜயதுங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் இணைந்திருந்தனர்.