Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2017 15:00:35 Hours

24 ஆவது படைத் பிரிவின் வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவின் 4 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுகள் (21) ஆம் திகதி மல்வத்த அம்பாறையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன் ஒரு கட்டமாக இந்த இரத்ததான நிகழ்வுகள் அம்பாறை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் அப்பிரதேசத்தில் உள்ள படைத் தலைமையகங்கள் ,பயிற்சி நிலையங்கள் மற்றும் படையணிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்த பணிகளில் இராணுவத்தின் 450 அங்கத்தவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த பணிகளை கௌரவித்து அம்பாறை வைத்தியசாலை பணிமனையால் 24 ஆவது படைப் பிரிவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த இரத்ததான நிகழ்வில் 30 வைத்திய அதிகாரிகள் உள்ளடக்கப்பட்ட குழுவினர் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்விறகு டொக்டர் பி.கே.சி லங்கா, அம்பாறை வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் ஹன்ச ராமநாயக,241 ஆவது படைத் தளபதி கேர்ணல் சிசிர குமார, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

spy offers | Women's Nike Superrep