Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2017 13:02:25 Hours

2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா போட்டிகள்

பல்வேறுபட்ட விளையாட்டு துறைகளில் திறமையுடையவர்களும் மனிதாபிமான நடவடிக்கைகளில் அங்கவீனமுற்ற படையினருக்கான 2017 ஆம் ஆண்டிற்கான இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் நவம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை ஹோமாகம தியகம விளையாட்டரங்கில் இடம்பெறும்.

இந்த போட்டிகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நவம்பர் மாதம் (16) ஆம் திகதி வியாழக் கிழமை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இராணுவ பரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாந்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த விளையாட்டு போட்டிகளில் வெளிநாட்டு இராணுவ வீரர்களும் கலந்து கொள்வதாகவும்,இரண்டு மாத காலமாக இந்த போட்டிகள் தியகம விளையாட்டரங்குகளிலும்,படையணி தலைமையகங்களிலும் 800படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இப்போட்டியில் சைக்கிள் ஓட்டம்,நாற்காலி மரதன்,வில் ஏய்தல்,பாரம் துாக்குதல்,ஹேன்டபோல் ,ஆசன ஹேன்டபோல்,கடற்கரை ஹேன்டபோல்,மேசைப்பந்து,கிரிக்கெட்,நீச்சல்,நாற்காலி சக்கர மேசைப்பந்து,வாயு துவக்கு வெடிவைப்பு,மெய்வல்லுனர் போட்டியின் வீரர்களும் கலந்து கொள்வர்.

இந்த விளையாட்டு நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் தலைமையில் இடம்பெறும்.

இப்போட்டியின் இறுதி நிகழ்வு (24) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்களது பங்களிப்புடன் இடம்பெறும்.

இந்த போட்டிகளுக்கு முழுமையான அனுசரனை டயலொக் நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

இந்தப் பரா போட்டிகள் 1991ஆம் ஆண்டு இராணுவ அங்கவீனமுற்ற படை வீரர்களின் போட்டியென ஆரம்பித்து 2010 ஆம் ஆண்டு இராணுவ பரா விளையாட்டு போட்டியாக பெயர் மாற்றப்பட்டதுஎனஊடகவியலாளருக்கு விளக்கினார்.

இந்த செய்தியாளர் மாநாட்டிற்கு இராணுவ பேச்சாளர் மற்றும் ஊடக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன,இராணுவ பரா சங்கத்தின் பிரதி தலைவர் பிரிகேடியர் ரஜீவ விக்கிரமசிங்க,செயலாளர் கேர்ணல் ராஜா குணசேகர ,பரா விளையாட்டு வீரரான சாஜன் தினேஸ் பிரியந்தவும் கலந்து கொண்டனர்.

Authentic Sneakers | Air Jordan 1 Hyper Royal 555088-402 Release Date - SBD