Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2017 10:00:40 Hours

மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியில் பல விடயங்களைக் கற்ற இலங்கை இராணுவத்தினர்

இலங்கை இராணுவத்தினர் பங்கேற்கும் மித்திர சக்தி கூட்டுப் பயிற்ச்சியானது இந்தியாவின் புனே நகரின் தெற்கு இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற வண்ணம் காணப்படுகின்றது.

அந்த வகையில் இக் கூட்டுப் பயிற்ச்சியில் கடந்த சனிக் கிழமை (21) இலங்கை இராணுவப் படையினரின் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விரிவாக்க கற்கை நெறி இடம்பெற்றது.

இதன் போது இந்திய இராணுவ 11ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் அணில்பூரி ,330ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மற்றும் மஹர் 1,மஹர் 2 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ் விரிவுரைகள் இலங்கை இராணுவ அதிகாரிகள் சார்பாக லெப்டினன்ட் கேர்ணல் லக்மால் பெரோ ,லெப்டினன்ட் கேர்ணல் சுமேத ரண்கம ,கெப்டன் கயந்த குணரத்தின மற்றும் லெப்டினன்ட் அயேஷ் தனுஷ்க போன்ரோரால் இடம் பெற்றன.

இந்திய இராணுவ 11ஆவது படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் அணில்பூரியவர்கள் 1980ஆம் ஆண்டு இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் பங்கேற்றமை குறிப்பிடத் தக்க விடயமாகும்.

இதன் போது இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான திரைப்படமாக அமைகின்ற “மாதா” திரைப்படத்தை இப் படையினர் இணைந்து கண்டு களித்தனர்.

இப் பயிற்;சிகளின் 10ஆவது நாளில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும் பலவாறான தாக்குதல் விடயங்கள் தொடர்பானதான விரிவுரையும் இடம் பெற்றது.

அத்துடன் கடந்த திங்கட் கிழமை (23) நடைபெற்ற இப் பயிற்சிகளில் இலங்கையில் அக்கராயன்குளத்திதை பயங்கராவாதிகளிடமிருந்து மீட்ட இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையினர் தொடர்பான விரிவுரையும் இங்கு இடம் பெற்றது.

Nike sneakers | adidas