Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

இராணுவ இலேசாயுத காலட்படையணிக்கு வெற்றி

இராணுவ 2017ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கிடையிலான உள்ளரங்க பரா படகோட்டப் போட்டியில் 7குழுக்கள் அடங்கிய 48 இராணுவ பரா அங்கவீனமுற்ற படகோட்டியளார்கள் இப் போட்டியில் தமது திறமையை வெளிக்காட்டி வெற்றியை தக்க வைத்துக்கொண்டனர்.

அந்த வகையில் இராணுவ படகோட்ட கழகத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க மற்றும் இராணுவ 11ஆவது இலேசாயுத காலட்படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எம் டி சி டி சில்வா போன்ரோரின் ஆலோசனைக்கு அமைய இப் போட்டி நிகழ்வுகள் கடந்த வியாழக் கிழமை (10) பனாகொடையில் இடம் பெற்றது.

இப் போட்டியில் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணி , இலங்கை இராணுவ இலேசாயுத படையணி , இலங்கை இராணுவ சிங்க படையணி , கெமுனு ஹேவா படையணி , கஜபா படையணி , விஜயபாகு காலாட் படையணி , மற்றும் விசேட படையணி போன்றன பங்கேற்றன.

விறுவிறுப்பான இப் போட்டியின் இறுதிச் சுற்றில் இராணுவ இலேசாயுத காலட்படையணி கஜபா படையணியுடன் போட்டியிட்டு வெற்றியீட்டியது.

இந் நிகழ்வில் சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எம் டி வைத்தியரத்தின மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டதுடன் இப் போட்டியில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு போட்டி முடிவின் போது சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.