Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th July 2017 13:48:43 Hours

படையினரால் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் டெங்கு ஒழிப்பு விசேட திட்டமானது கொழும்பு கம்பஹா மற்றும் களுத்தரை போன்ற மாவட்டங்கள் உள்ளடங்களாக பல பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை (14) இடம் பெற்றது.

இவ் டெங்கு ஒழிப்பு திட்டமானது கடந்த சனிக் கிழமை (1) திகதி சுகததாச கலையரங்கில் அன்மையிலுள்ள சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் தலைமையில் சுகாதார பரிசோதகர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் ஹங்வெல்ல ஹோமாகம கடுவெல பிலியந்தல கோட்டை கஹாதுடுவ அத்தனங்கல மிரிகம தொம்பே பியகம களனி ஹோரண மதுகம வட்டுவ மற்றும் பண்டாரகம போன்ற பிரதேசங்களில் இவ் டெங்கு ஒழிப்பு திட்டத்தின் சிரமதானப் பணிகளை 141, 142 மற்றும் 582 போன்ற தலைமையகங்களின் காலாட் படையணி மற்றும் இலங்கை படைக்கலச் சிறப்பணி படைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 படையினர் இப் பணிகளில் ஈடுபட்டுள்ளனதுடன் கெமுனு ஹேவா படையினர் தமது பணிகளை தொடங்கொட பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளனர்.

Asics shoes | Air Max