Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2024 16:54:23 Hours

22 வது காலாட் படைப்பிரிவினால் பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகளை விநியோகம்

22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் கருத்தின்படி 222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்.கே.எஸ் திலகரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினர் 25 பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கும் திட்டத்தை படையலகின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.டபிள்யூ.எம்.பி வெகடபொல யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் 22 ஏப்ரல் 2024 அன்று கந்தளாயில் முன்னெடுத்தனர். இத்திட்டத்திற்கான நன்கொடையினை திரு. சந்தன அழாகோன் மற்றும் திருமதி பிரீதீபா கபுகமகே ஆகியோர் வழங்கினர்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 222 வது காலாட் பிரிகேட் தளபதி, 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள், நன்கொடையாளர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.