Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2024 14:49:21 Hours

52 வது காலாட் படைப்பிரிவில் போர் இலக்கியம் தொடர்பான விரிவுரை

52 காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 52 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை படையலகுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் 25 ஏப்ரல் 2024 அன்று உளவியல் செயல்பாட்டு விரிவுரை வெற்றிகரமாக நடத்தப்பட்டது...

ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் 52 வது காலாட் படைப்பிரிவின் படையினரின் ஏற்பாட்டில் வரலாறு தொடர்பான அறிவை வழங்கும் விரிவுரை இடம்பெற்றது...

ரணவிருவா மாத இதழின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈஏஏஎஸ்.சாமிந்த அவர்களால் நடாத்தப்பட்ட விரிவுரையானது 'வீர பாதுகாவலன்' எனும் தொனிப்பொருளின் கீழ் 'இலங்கை இராணுவப் போர் இலக்கியம்' என்ற தலைப்பில் இடம்பெற்றது. அத்துடன் இராணுவ புலனாய்வு படையணியின் மேஜர் எம்எச்எம்எஸ்.பண்டார அவர்களால் பங்கேற்பாளர்களின் உற்சாகத்தை உயர்த்தும் வகையில் ஒரு தொழில்முறை சிப்பாயின் குறிப்பிடத்தக்க பங்கை வலியுறுத்தி, 'பெருமைமிக்க சிப்பாய்' என்ற தலைப்பில் விரிவுரை வழங்கினார்...

விரிவுரையில் 20 அதிகாரிகளும் 318 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்...