Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th April 2024 17:42:31 Hours

64 வது காலாட் படைப்பிரிவு கழகங்களுக்கு இடையிலான கரப்பந்து போட்டியில் பாரதி விளையாட்டு கழகம் வெற்றி

64 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்.எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 642 வது காலாட் பிரிகேட், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் ’64 வது காலாட் படைப்பிரிவின் கழகங்களுக்கிடையிலா சவால் கிண்ண கரப்பந்து போட்டி - 2024’ ஐ ஏற்பாடு செய்திருந்தது.

ஏழு விளையாட்டுக் கழகங்களின் பங்குபற்றுதலுடன் 2024 மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் போட்டிகள் இடம்பெற்றன. 2024 ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் மின்ஒளி விளையாட்டுக் கழகமும் 'பாரதி' விளையாட்டுக் கழகமும் போட்டியிட்டு பாரதி விளையாட்டுக் கழகம் போட்டியின் சம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் போட்டியில் பங்கேற்றனர்.