Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 14:54:54 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினர் 2024 ஏப்ரல் 03 ஆம் திகதி அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் பொரளை படையணி தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாடினர்.

கயிறு இழுத்தல், அழகுராணி தேர்வு, யானைக்கு கண் வைத்தல், பனிஸ் உண்ணுதல் மற்றும் பல விளையாட்டுகள் உட்பட பல சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய நிகழ்வுகளுடன் விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நயோமி குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிறைவாக, படையணி தலைமையகம் மற்றும் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி ஆகியவற்றில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கு பிரதம அதிதியால் உலர் உணவுப் பொதிகள் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.