Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2024 18:48:24 Hours

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அதிகாரிகளின் விடுமுறை விடுதி நிர்மாணிப்பை மேற்பார்வையிடல்

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்கள் 2024 மார்ச் 30 அன்று ஹவாஎலிய அதிகாரிகளுக்கான விடுமுறை விடுதியின் நிர்மாணப் பணிகளை ஆய்வு செய்தார். வி்டுதி மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் 17 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணிப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதே அவரது விஜயத்தின் நோக்கமாகும்.

மேஜர் ஜெனரல் சமரக்கோன் தனது விஜயத்தின் போது, கட்டுமானப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள படையினருடன் கலந்துரையாடி திட்டத்தின் வெற்றிகரமான அபிவிருத்தியை உறுதி செய்வதற்கான வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்கினார். 17 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஈஏடிபீ எதிரிசிங்ஹ எல்எஸ்சி மற்றும் 6 வது களப் பொறியியல் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி ஆகியோர் குழு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்களை எடுத்துரைத்து, கட்டுமான செயல்முறையின் தற்போதைய நிலை குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினர்.

இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.