Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2024 18:43:13 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நல்லிணக்க மேம்பாட்டு திட்டம்

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு பிரதேச சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நிமித்தம் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் 2024 மார்ச் 30 அன்று 'மொழியூடான நல்லிணக்கம்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் நெலும்வெவ மத்திய கல்லூரி மற்றும் வெல்லிகந்த சிங்கபுர ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 188 சிங்கள மாணவர்கள் தமிழையும் இராமகிருஷ்ண மிஷன் கல்லூரி மற்றும் முதலைகுடா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 120 தமிழ் மாணவர்கள் சிங்களத்தையும் கற்றுக்கொள்ள இணைந்துக்கொண்டனர்.

நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்கள் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் மொழி கற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மாணவர்களின் இருமொழி சரளத்தை மேம்படுத்த ஊக்குவித்தார். இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வண. அருட்தந்தை எபினேசர் ஜோசப் அருட் தந்தையர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பங்குபற்றிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாடில் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஒரு இசை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு மதிய உணவு வழங்களுடன் நிகழ்வு நிறைவுற்றது.