Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2024 10:50:19 Hours

ஏசியன் பெயிண்ட் கோஸ்வே - பொக்‌ஸ் ஹில் சூப்பர் குரோஸ் 2024 செய்தியாளர் சந்திப்பு

இலங்கை ஒட்டோமொபைல் விளையாட்டு கழகத்துடன் இணைந்து இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி 2024 ஏப்ரல் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ள 28 வது ஏசியன் பெயிண்ட் கோஸ்வே- பொக்‌ஸ் ஹில் சூப்பர் குரோஸ் 2024 இன் செய்தியாளர் மாநாடு 28 மார்ச் 2024 அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் புலு மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல உள்நாட்டு அனுசரணையாளர்கள், இலங்கை ஒட்டோமொபைல் விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் இதில் பங்குபற்றினர்.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தினருக்கு உற்சாகத்தை அளிப்பதற்காகவும், மோட்டார் விளையாட்டு போட்டியாளர்கள் தங்கள் ஓட்டுதல் திறன்களை காட்சிப்படுத்துவதற்காகவும் பொக்‌ஸ் ஹில் சூப்பர் குரோஸ் 2024 ஐ ஐந்து ஆண்டுகளின் பின் நடாத்துவதற்கு ஏற்பாட்டுக் குழு ஏற்கனவே வேலைத் திட்டங்களை மேற்கொண்டது. 25 மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிகழ்வுகளுடன் போட்டியை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தற்போதைய உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி திரட்டும் திட்டமாக இந்த மாபெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.டி.ஐ. மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி செய்தியாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி, இலங்கை மோட்டார் விளையாட்டு நாட்காட்டியின் இந்த மாபெரும் நிகழ்வை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து முக்கிய வீரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மாநாட்டின் போது, ஒரு சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பிரதான மற்றும் ஏனைய அனுசரனையாளர்களுக்கு நன்றி பாராட்டியதுடன் குறுகிய அறிவிப்புக்கு மத்தியிலும் சாத்தியமாக்கிய பல்வேறு பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டது. நிகழ்வின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை மேற்பார்வை செய்வதில் இலங்கை ஒட்டோமொபைல் விளையாட்டு கழக அதிகாரிகளின் செயலூக்கமான முயற்சிகள், விளம்பரப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு என்பன பெரிதும் பாராட்டப்பட்டன.

சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை ஒட்டோமொபைல் விளையாட்டு கழக தலைவர், ஏசியன் கோஸ்வே பெயிண்ட் லங்கா பிறைவட் லிமிடட் உட்பட அனுசரணை வழங்கும் பின்வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிலோன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மெக்லரன்ஸ் லிமிடட், பின்லாந்து ஹோல்டிங், பிரவுன்ஸ் குரூப் எக்ஸைட், ரைனோ உற்பத்தி நிறுவனம், டக்ளஸ் & சன்ஸ் (பிரைவேட்) லிமிடெட், ஹில்டன் கொழும்பு மற்றும் பல பெறுமதிமிக்க அனுசரணையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.