Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th March 2024 18:04:48 Hours

சாலியபுரவில் படையணிகளுக்கு இடையிலான 05 வது மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் பிரதி பதவி நிலைப் பிரதானியும் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 05 ஆவது இலங்கை இராணுவப் படையணிகளுக்கிடையிலான மோட்டார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 2024 மார்ச் 11 ஆம் திகதி சாலியபுர கஜபா சுப்பர் குரோஸ் மோட்டார் பந்தயப் பாதையில் நடைபெற்றது.

இலங்கை இராணுவத்தின் 13 படையணிகளை பிரதிநிதித்தி 06 போட்டிகளின் கீழ் 30 போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன் இப்போட்டி நடைபெற்றது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் போட்டியாளர்கள் போட்டி முடிவில் மொத்த சம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டனர்.

பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு விருதுகள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் போட்டியை கண்டுகளித்தனர்.

வெற்றியாளர்கள் பின்வருமாறு:

சிறந்த படையணி - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

இரண்டாம் இடம் – இலங்கை இராணுவ சேவைப் படையணி

சிறந்த போட்டியாளர் - லான்ஸ் கோப்ரல் கே.ஏ.டி.ஆர். ஜயஷான் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

125சீசீ ஸ்டாண்டர்ட் (புதியவர்கள்) போட்டி

1ம் இடம் - மேஜர் டி.கே. பலிஹக்கார இலங்கை இராணுவ சேவைப் படையணி

2ம் இடம் - லெப்டினன் டபிள்யூ.பீ.எல். விதுரங்க இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

3ம் இடம் - கோப்ரல் எச்.எம்.டி.சமரகோன் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

125சீசீ ஸ்டாண்டர்ட் போட்டி

1ம் இடம் - லான்ஸ் கோப்ரல் கே.ஏ.டி.ஆர்.ஜயஷான் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

2ம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஏ.டபிள்யூ.எல்.ஜே.குமாரசிங்க இலங்கை இராணுவ சேவைப் படையணி

3ம் இடம் – லான்ஸ் கோப்ரல் எல்.ஜி.டி.பி. கமகே இலங்கை இராணுவ சேவைப் படையணி

125சீசீ ஸ்டாண்டர்ட் நிகழ்ச்சி

முதலாம் இடம் - கோப்ரல் எம்.எம்.எஸ்.எஸ். கயான் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

2ம் இடம் - கோப்ரல் ஜே.எம்.எஸ்.ஜயலத் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி

3ம் இடம் - லான்ஸ் கோப்ரல் டிடபிள்யூஎம்எஸ். திஸாநாயக்க இராணுவ சமிக்ஞை படையணி

சூப்பர் மோட்டார் 250 - 450 சீசீ நிகழ்வு

1ம் இடம் - சிப்பாய் என்.எம்.பி.டி. செனவிரத்ன கஜபா படையணி

2ம் இடம் - மேஜர் ஏ.ஏ.எல்.என். அதிகாரி இலங்கை சிங்க படையணி

3ம் இடம் - லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.வி.ஜி.எஸ். சஞ்சீவ விஜயபாகு காலாட் படையணி

250 சீசீ ஸ்டாண்டர்ட் நிகழ்வு

1ம் இடம் - கோப்ரல் எச்.எம்.எஸ்.எஸ். கயான் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

2ம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஏ.டபிள்யூ.எல்.ஜே. குமாரசிங்க இராணுவ சேவைப் படையணி

3ம் இடம் - சிப்பாய் எச்.ஏ. ஷெஹார இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

250 சீசீ போட்டி

1ம் இடம் - லான்ஸ் கோப்ரல் கே.ஏ.டி.ஆர். ஜயஷான் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

2ம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஏ.டபிள்யூ.எல்.ஜே. குமாரசிங்க இராணுவ சேவைப் படையணி

3ம் இடம் - கன்னர் டி.கே.ஆர்.என்.எஸ். குமார இலங்கை பீரங்கி படையணி