Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th March 2024 15:37:51 Hours

18 வது தேசிய வுஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவம் வெற்றி

இலங்கை தேசிய வுஷூ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 18 வது தேசிய வுஷூ சம்பியன்ஷிப் போட்டி 2024 மார்ச் 10 முதல் 13 வரை மஹரகம தேசிய இளைஞர் நிலையத்தில் நடைபெற்றதுடன், இப்போட்டியில் இராணுவ போட்டியாளர்கள் போட்டியின் அனைத்து சம்பியன்ஷிப்பையும் பெற்றுக் கொண்டனர்.

41 இராணுவப் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், ‘சண்டா’ பிரிவில் 06 தங்கம், 09 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களையும் ‘தாவுலு’ பிரிவில் 07 தங்கம், 04 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களையும் இராணுவத்தினர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தேசிய வுஷூ சம்மேளனத்தின் தலைவர் திரு.மானேல்தர்மகீர்த்தி கலந்து சிறப்பித்தார். மேலும் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ வுஷூ குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சி.எஸ்.முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப்போட்டியை கண்டுகளித்தனர்.

தங்கப் பதக்கம் வென்றவர்கள் விவரம் பின்வருமாறு:

சண்டா பிரிவில்

ஆண்கள் பிரிவு 48 கிலோ – லான்ஸ் கோப்ரல் பீ.கே.ஆர்.ஐ. பத்மசிறி இலங்கை சிங்கப் படையணி

ஆண்கள் பிரிவு 65 கிலோ - கோப்ரல் ஆர்.பீ.என். மதுசங்க இலங்கை சிங்கப் படையணி

ஆண்கள் பிரிவு 70 கிலோ - கோப்ரல் என்.எச்.ஏ. சம்பத் குமார இலங்கை சிங்கப் படையணி

ஆண்கள் பிரிவு 80 கிலோ - லான்ஸ் கோப்ரல் கே.எம். வசந்த குமார விஜயபாகு காலாட் படையணி

பெண்கள் பிரிவு 48 கிலோ - லான்ஸ் கோப்ரல் கே.வி.என். விஜேகுணரத்ன இலங்கை இராணுவ மகளிர் படையணி

பெண்கள் பிரிவு 60 கிலோ - கோப்ரல் என்.ஜி. பட்டுவிட்ட இலங்கை இராணுவ மகளிர் படையணி

தாவுலு பிரிவில்

பெண்கள் பிரிவு - கோப்ரல் எச்.எல்.டி.டீ.என். குணசேகர இலங்கை இராணுவ மகளிர் படையணி (இரண்டு தங்க பதக்கங்கள்)

பெண்கள் பிரிவு - சிப்பாய் பி.எம்.எச். பாக்யா இராணுவ சமிக்ஞை படையணி (இரண்டு தங்க பதக்கங்கள்)

ஆண்கள் பிரிவு – பணிநிலை சாஜன் டி.எம்.எச்.சி. பண்டார இராணுவ புலனாய்வு படையணி

ஆண்கள் பிரிவு - சிப்பாய் டபிள்யூ.எம்.எம்.டபிள்யூ.ஜி. ஜயலத் இலங்கை சிங்கப் படையணி

பெண்கள் பிரிவு – லான்ஸ் கோப்ரல் பி.எச்.டி.எஸ். புவனேகா இலங்கை இராணுவ மகளிர் படையணி