Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2023 10:28:19 Hours

‘மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா வீஎஸ்வீ யுஎஸ்பீ’ போர் சகிப்புத்தன்மை பயிற்சி போட்டி-2023 அனுராதபுரத்தில்

இலங்கை கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா வீஎஸ்வீ யுஎஸ்பீ போர் சகிப்புத்தன்மை பயிற்சி போட்டி-2023’ நவம்பர் 17 முதல் 19 வரை அனுராதபுரம் கவச வாகன படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நோக்கம் கவச வாகன படையணியில் உள்ள வீரர்களுக்கு உடற்தகுதி, சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை மேம்படுத்துவதாகும். இலங்கை கவச வாகன படையணி படைத்தளபதியின் முயற்சியினால் முதன்முறையாக இந் நிகழ்வு நடைப்பெற்றது.

மேலும் இந் நிகழ்வு ஆண்டு விழாவாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியானது 5 கிமீ தூரம் ஓடி, பின்னர் 20 போர்த் தடைகளைக் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டியில் ஆறு படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 20 படைவீரர்களாக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா சவால் கிண்ணம் 2023ல் 4 வது இலங்கை கவச வாகன படையணி சம்பியானாக தெரிவசெய்யப்பட்டதுடன் 5 வது இலங்கை கவச வாகன உளவு படையணி மற்றும் 1 வது இலங்கை கவச வாகன உளவு படையணி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றனர்.

4 வது இலங்கை கவச வாகன படையணியின் லான்ஸ் கோப்ரல் பீபிஏ திலகரத்ன சிறந்த சிப்பாயாக தெரிவு செய்யப்பட்டார்.

மறைந்த மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா வீஎஸ்வீ யுஎஸ்பீ அவர்கள் 1959 முதல் 1992 வரை இலங்கை கவச வாகன படையணியில் பணியாற்றிய ஒரு புகழ்பெற்ற வீரர் ஆவார். கவச வாகன பிரிகேட்டின் முதலாவது தளபதியான இவர் ஓய்வுபெறும் போது இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவி வகித்தார். மறைந்த மேஜர் ஜெனரல் வை பாலரத்னராஜா வீஎஸ்வீ யுஎஸ்பீ அவர்களின் மகன் திரு.பிரமன் பாலரத்னராஜா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் போட்டிக்கு முழு அனுசரணை வழங்கினர்.

இலங்கை கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்கேடி பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் திரு.பிரமன் பாலரத்னராஜா ஆகியோர் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர். கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.