Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 20:16:48 Hours

‘மித்ர சக்தி 2023’ பயிற்சில் பங்குபற்றிய படையினர் நாடு திரும்பினர்

இந்தியா மற்றும் இலங்கை படையினரின் பங்கேற்புடன் நவம்பர் 16-28 திகதி வரை புனேவில் நடைப்பெற்ற 'மித்ர சக்தி-2023' இராணுவப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 29 அதிகாரிகள் மற்றும் 94 சிப்பாய்கள் கொண்ட இலங்கை இராணுவக் குழு இன்று (நவம்பர் 30) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினர், இலங்கை விமானப்படையின் 05 படையினர் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 9 வது 'மித்ர சக்தி-2023' புனேவில் உள்ள அவுந்த் நகரில் நவம்பர் 16 அன்று ஆரம்பமானது. பயிற்சி திங்கட்கிழமை (நவம்பர் 28) புனேவில் உள்ள அவுந்த் நகரில் நிறைவு பெற்றது.

12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி எஸ் முனசிங்க டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி,122 வது பிரிகேட் தளபதி கேணல் கேஎச்எம்யுபி கொலங்கஹபிட்டிய யுஎஸ்பீ மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் குழுவை வரவேற்னர்.