Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th January 2023 19:32:20 Hours

வெளி செல்லும் நிதி பணிப்பாளருக்கு இராணுவ தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தின் நிதிப் பணிப்பாளர் திரு நிமல் கருணாதிலக்க, கல்வி அமைச்சில் புதிய நியமனம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் விடைப்பெறுவதையிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (3) சந்தித்தார்.

இலங்கை இராணுவத்தில் இருந்து வெளியேறும் நிதி பணிப்பாளரை இராணுவத் தளபதி வரவேற்றார். முதலில், கல்வி அமைச்சின் பிரதம நிதி அதிகாரியாக திரு நிமல் கருணாதிலக்கவின் புதிய பதவி உயர்வுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நட்புறவு சந்திப்பின் போது இருவரும் கடந்த கால நினைவுகள் மற்றும் இராணுவ நிதி நிர்வாகத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அனைத்து கடினமான காலங்களையும் எவ்வாறு சமாளித்தார் என்பதை நினைவு கூர்ந்தனர்.

உரையாடல்களின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெளிசெல்லும் அரச அதிகாரிக்கு தனது நன்றியைத் தெரிவித்து கொண்டதுடன் நல்லெண்ணம் மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக ஒரு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 8 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதிப் நிதி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட திரு கருணாதிலக, 2018 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிதிப் பணிப்பாளராக நியமனம் பெற்று அன்றிலிருந்து இராணுவத்தில் அதே நியமனத்தில் சேவையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.