Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2023 20:21:48 Hours

விசாக்கியன்ஸ் ‘கலர்ஸ் நைட்’ நிகழ்ச்சிக்கு பிரதம கள பொறியியலளர் பிரதம அதிதியாக

வியாழக்கிழமை 21 ம் திகதி இடம்பெற்ற விசாகியன்ஸ் கலர்ஸ் நைட் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பிரதம களப் பொறியியலாளரும் பொறியியல் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். .

சாதனைகளை பறைசாற்றும் மற்றும் திறமையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் விஷாகியன்ஸ் “கலர்ஸ் நைட்” கொழும்பு விசாக வித்தியாலயத்தில் நடைபெற்றது. 2021/2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பிரதம அதிதியின் வருகையை அடுத்து, பிரதம அதிதிக்கு ஜனாதிபதி சாரணர்கள் மரியாதை செலுத்தியதுடன் பெண் மாணவச் சிப்பாய்களின் பேண்ட வாத்திய குழுவினால் மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, பிரதம அதிதி மற்றும் பிரமுகர்கள் இருவரையும் அதிபர் அன்புடன் வரவேற்றார்.

அதிபர் திருமதி மனோமி செனவிரத்ன அவர்கள் வரவேற்பு உரையை நிகழ்த்தியதுடன், விளையாட்டை ஊக்குவிப்பதில் இராணுவத்தின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த இராணுவ ஆளுமைக்காக பிரதம விருந்தினராகப் பிரதம களப் பொறியியலாளர் மற்றும் பொறியியல் படைப்பிரிவின் தளபதியை அழைக்க தூண்டியது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பாடசாலையின் அதிபரின் தலைமையில் 2021/2022 ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் குறிப்பிடத்தக்க விளையாட்டு சாதனையாளர்களான விசாகியர்களை பாராட்டும் வகையில் இந்த வண்ணமயமான மற்றும் கவர்ச்சியான நிகழ்வு நடாத்தப்பட்டது.

பிரதம அதிதி தனது உரையின் போது விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் மன மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அதன் முக்கிய பங்கையும் உறுதியான வாழ்க்கையின் நோக்கத்தின் அதன் பங்கு தொடர்பாகவும் வலியுறுத்தினார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வை கண்டுகளித்தனர்.