Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th February 2024 18:45:51 Hours

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 52 வது காலாட் படைப்பிரிவுக்கு முதல் விஜயம்

புதிய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை 52 காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு 2024 பெப்ரவரி 05 மற்றும் 06 ம் திகதிகளில் மேற்கொண்டார்.

வருகை தந்த, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

படையினருக்கு உரையாற்றிய யாழ் தளபதி இராணுவ நிபுணத்துவத்தின் மூலம் சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பிரதேசத்தில் இயல்பு நிலையைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். அதன் பின், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 52 வது காலாட் படைப்பிரிவுக்கு மேற்கொண்ட தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் அடையாளமாக மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன், குழு படமும் எடுத்து கொண்டார்.

தனது விஜயத்தில் யாழ் தளபதி, 522 வது காலாட் பிரிகேட், 23 வது கெமுனு ஹேவா படையணி, 1 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் பெரியபச்சபளை வெடிமருந்து களஞ்சியம் என்பவற்றிக்கு விஜயம் செய்த்துடன் முதல் நாள் விஜயத்தின் இறுதியாக யாழ் தளபதி சுண்டிக்குளம் புனித மரியாள் தேவாலயத்தின் வண. அருட்தந்தை அமல்ராஜ் அவர்களையும் சந்தித்தார்.

இரண்டாம் நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது யாழ் தளபதி 521 மற்றும் 523 வது காலாட் பிரிகேட் மற்றும் 11 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 4 வது இலங்கை சிங்க படையணி, 7 வது விஜயபாகு படையணி மற்றும் 11 வது கள பொறியியல் படையணி ஆகியவற்றிக்கு விஜயம் மேற்கொண்டார்.

52 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, பிரிகேட் தளபதிகள், பணி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.