Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2019 13:32:35 Hours

யாழ் படையினரால் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பூரண ஏற்பாட்டுடன் யாழ்ப்பாண முஸ்லீம் சங்கத்தின் தலைவர் திரு முகம்மது நியாஷ் அவர்களது அனுசரனையில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினருக்கு உலருணவு பொருட்கள் இம் மாதம் (15) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

யாழ் குடா நாட்டிலுள்ள சாவகச்சேரி, சக்திபீச் மற்றும் நயினைதீவு பிரதேசத்தில் வாழ்ந்து வந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லீம் குடும்பத்தாருக்கு இந்த உலருணவு பொருட்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முஸ்லீம் சமூக தலைவர்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயணாளி குடும்பத்தினர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.trace affiliate link | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov