Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2023 16:04:27 Hours

முன்னாள் இராணுவ வீரராக இருந்த மூத்த நடிகருக்கு தளபதி இறுதி மரியாதை

சில ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் சேவை புரிந்த மூத்த நடிகரான மறைந்த அமரசிறி கலன்சூரிய அவர்களின் உடலுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஆகியோர் இணைந்து இன்று (3) காலை இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இராணுவத் தளபதி நெருங்கிய உறவினர்களுடன் உரையாடியதுடன், மறைந்த நடிகரின் சினிமா வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்.

அவர் நடிப்பிற்கு வருவதற்கு முன்னர், 1963 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த பின்னர் 2 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியில் லான்ஸ் கோப்ரல் ஆக இராணுவத்தில் சேவையாற்றியுள்ளார்.