Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2023 22:16:37 Hours

மாத்தளையில் ‘உப சம்பத்தா வினய கர்மா’வில் சிறப்பு விருந்தினராக தளபதி

இலங்கை இராமஞ்ஞா மகா பீடத்தில் 73 வது ‘உபசம்பத்தா வினய கர்மா’ (உயர் நியமனம்) ஆரம்ப நிகழ்வு மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் வியாழக்கிழமை (20) மகா சங்கத்தினர், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, மத்திய மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் எல் எச் எஸ் சி சில்வா டப்ளியூடப்ளியூபீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீசி பிஎஸ்சி எம்பில் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகிய முக்கியஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

அரச அனுசரணையுடன் இடம்பெற்ற விழாவின் போது மொத்தம் 300 புதிய துறவிகள் துறவறத்தின் பழமையான மரபுகளுக்கு இணங்க உயர் நியமனம் பெற்றனர். இந்நிகழ்வு இலங்கை இராமஞ்ஞா மகா பீடத்தில் அதி வண.மகுலேவே விமல மகா நாயக்க தேரரின் தலைமையில் இடம்பெற்றது.

73 வது ‘உபசம்பத வினய கர்மா’வின் முறையான அறிவிப்பு, ‘ஜெய மங்கள’ ஸ்லோகங்கள் மற்றும் முன்னோடியான ‘அபிநந்தன’ பாடல், ‘உபசம்பத’ தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ‘பிரிகர’ வழங்குதல், கௌரவ பட்டங்கள் வழங்குதல், நினைவு பரிசுகள் வழங்குதல், துறவிகளின் போதனை நிகழ்வுகள் அதனை தொடர்ந்து ஜனாதிபதி உரையினையும் நிகழ்த்தினார்.

மாத்தளை பண்டாரபொல சுது கங்கையின் ‘சீமமலகாய’ என்ற இடத்தில் ‘விநாய கர்ம’ நிகழ்வு இடம்பெற்றது.