Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2023 09:01:45 Hours

மத்திய படையினரால் ஹாலிஎல ரயில் பாதை தடைநீக்கம்

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர் 11 டிசம்பர் 2023 அன்று மண் சரிவு காரணமாக உடுவர, ஹாலிஎல அருகே மற்றொரு ரயில் பாதையில் ஏற்பட்ட தடையினை அகற்றும் பொதுச் சேவையில் மீண்டும் ஒருமுறை தமது பங்களிப்பை வழங்கினர்.

இதனால், பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு குறுகிய அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர், பாதிக்கப்பட்ட ஹாலிஎல பகுதிக்குச் சென்று, மண் மேட்டை அகற்றிய பின்னர் ரயில் சேவையினை வழமைக்கு கொண்டுவந்தனர்.