Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2017 09:21:23 Hours

மட்டக்களப்பில் அனைவரையும் ஈர்த்த நத்தார் நிகழ்வு

கிழக்கு 231ஆவது பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் முழு ஏற்பாட்டுடன் மட்டகளப்பின் கிரிஸ்தவ சமுகம் ஒன்றிணைந்து பிரதேசத்தில் அனைத்து இனங்களுக்கிடையே கலாச்சார மத ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் மட்டக்களப்பு காந்திபார்கில் சிறப்பு நத்தார் பண்டிகையை வெள்ளிக்கிழமை (22)அம் திகதி சிறப்பாக கொண்டாடினர்

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஜோசப் பொன்னையா, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல, மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார், 22ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, 24ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிஹே, 23ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுலா அபயநாயக, மற்றும் 231 படைத ;தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகோடியர், செனரத் நிவுனுகெல்ல 232ஆவது படைத் ;தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பிரிகோடியர், கேர்ணல் ரொசான் ஜயமன்ன, மட்டகளப்பு மாவட்ட அனணயாளர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அருட்தந்தை அவர்களால் வரவேற்பு உறையும் வாசிக்கப்பட்டதின்; பின்னர் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மதிய நத்தார் நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம் பெற்றதோடு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஜோசப் பொன்னையா அவர்களால் நத்தார் தகவல்களும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்பாறை தேவாலயம், நாவற்குடா தேவாலயம் கல்முனை சூரி தேவாலயம், சென் செசிலியா கல்லுாரியும் இராணுவத்துடன் இணைந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அடையாளப்படுத்தி பல வேறு நிகழ்வுகளும் நத்தார் கீதங்களும் பாடினர்.

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல அவர்களினால் நத்தார் பண்டிகையின் சிறப்பு பற்றி சுருக்கமான செய்தியும் இந் நிகழ்வை சிறப்பாக காட்டியது.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் இயேசு கிறிஸ்து பிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் பல வகையான அலங்காரங்களும் மிக சிறப்பாக காணப்பட்டன.

latest Running | Air Jordan