Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2024 18:41:19 Hours

போர் வீரர் சார்ஜன் ஆர்.ஏ. ராஜபக்ஷ (ஓய்வு) அவர்களுக் இராணுவத் தளபதி உதவி

மனிதாபிமான நடவடிக்கையின் போது காயங்களுக்கு உள்ளான சிரேஷ்ட போர் வீரரான 10 வது கஜபா படையணியின் சார்ஜன் ஆர்.ஏ. ராஜபக்ஷ (ஓய்வு) அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் வியாழக்கிழமை (மார்ச் 07) இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

சந்திப்பின் போது இராணுவத் தளபதி சார்ஜன் ஆர்.ஏ. ராஜபக்ஷ (ஓய்வு) அவர்களுக்கு துணை சாதன நன்கொடையுடன், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், செயற்கை கைகள் மற்றும் செயற்கை கால்கள் போன்றவற்றை வழங்கினார். இந்தப் பொருட்கள் போர் வீரர்கள் விவகார பணிப்பகத்தால் நிர்வகிக்கப்படும் குருநாகல் இராணுவ செயற்கை மற்றும் எலும்பு மூட்டுப் தயாரிப்பு பணிமனையில் தயாரிக்கப்பட்டவை.

இராணுவத் தளபதியின் இந்த திட்டமானது, குறிப்பாக தேசத்திற்கு சேவையாற்றும்போது காயங்களுக்கு உள்ளான வீரர்களை ஆதரிப்பதற்கும் கௌரவிப்பதற்கும் அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இது அவர்களின் நல்வாழ்வுக்கான அவரது அர்ப்பணிப்பை உள்ளடக்கியதுடன் இந்த செயலானது ஒரு தந்தையின் உருவத்திற்கு ஒப்பானதாகும்.

போர் வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.சி. ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ, அதிகாரவாணையற்ற அதிகாரி I டபிள்யூ.ஏ.கே.பீ.கே. விதானகே யூஎஸ்பீ, சார்ஜன் ஆர்.ஏ. ராஜபக்ஷ (ஓய்வு) செயற்கை எலும்பு நிபுணர் மற்றும் எலும்பு மூட்டு நிபுணர் ஆகியோரும் இந்த சந்தப்பின்போது உடனிருந்தனர்.

சார்ஜன் ஆர்.ஏ. ராஜபக்ஷ (ஓய்வு) அவர்கள் 1993 செப்டம்பர் 14 இராணுவத்தில் இணைந்துகொண்டார். 01 டிசம்பர் 1995 இல் ரிவிரெச I நடவடிக்கையின் போது காயமடைந்தார். அவர் 2010 பெப்ரவரி 16 இல் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது கொபேகனே இல் வசிக்கிறார்.