Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2023 20:07:17 Hours

புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி கடமைகளை பொறுப்பேற்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் 29 டிசம்பர் 2023 அன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பதவியேற்றார். அவர் வளாகத்திற்கு வந்தவுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

உத்தியோகபூர்வ இராணுவ மரியாதையின் பின்னர், மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றதுடன், தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதன்பின், புதிய மேற்குத் தளபதி அவர்கள் வளாகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றதைக் குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றை நட்டு, குழு படம் எடுத்துக் கொண்டதுடன், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

சம்பிரதாய நிகழ்வுகளின் பின், மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் படையினருக்கான தனது உரையில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் வெற்றியை அடைவதில் அதன் ஒருங்கிணைந்த பங்கையும் வலியுறுத்தினார். மேலும் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டு தனது இலக்குகளை கோடிட்டுக் காட்டியதுடன், தனது நோக்கங்களை நடைமுறைப்படுத்த படையினரை தூண்டினார்.

பின்னர், மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 61 மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகளினால் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி, பிரிகேட் தளபதிகள், பிரிகேடியர் பொதுப்பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, கட்டளை அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் இராணுவ செயலாளராக பதவி வகிப்பதுடன் தற்போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைக தளபதியாக நியமனம் பெற்றுள்ளார்.