Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2022 17:50:01 Hours

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்

அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் இன்று (21) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

இராணுவத் தலைமையகப் பிரிகேட் தளபதி கேணல் டிகேஆர் பெரேரா அவர்கள், புதிய கடற்படைத் தளபதியை இராணுவக் கொடிகளின் மத்தியில் சம்பிரதாய ரீதியில் வரவேற்றார்.

இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபில்யுடபில்யுடபில்யுஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபி்ல்யுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் சில நிமிடங்களுக்குப் பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நேர்த்தியான ஆடைகளுடன் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்க பிரதம அதிதி அழைக்கப்பட்டார்.

அடுத்ததாக, தளபதியின் செயலக கட்டிடத்தின் நுழைவாயிலில் வருகை தந்த கடற்படைத் தளபதியை இராணுவத் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரிய ஆர்டபி்ல்யுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர் இராணுவச் செயலாளர் தளபதியின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே கடற்படைத் தளபதிக்கு அன்பான வரவேற்பு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது, தேசிய பாதுகாப்புக் பிரச்சினைகளுக்கு பாதுகாவலர்களாக எதிர்காலத்திலும் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்ட இருவரும், கடந்த காலத்தில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தின் இறுதி கட்ட காலத்தின் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். ஒரு பொதுவான குறிக்கோளுக்காக போராடும் காலகட்டம். சுமுகமான கலந்துரையாடல்கள் நிறைவடைந்ததையடுத்து, இராணுவத் தளபதி அன்றைய பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கி, அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்தினார்.

வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இலங்கை இராணுவத்தினரின் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததுடன், வளாகத்தை விட்டு வெளியேறும் முன், தளபதி அலுவலகத்தில் விருந்தினர் எண்ண பதிவு புத்தகத்தில் சில குறிப்பிடத்தக்க பாராட்டுக்களை பதிவிட்டார்.

இலங்கை கடற்படையின் 25 வது தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள், 2022 டிசம்பர் 18 இலங்கையின் ஆயுதப்படைகளின் சேனாதிபதியும் ஜனாதிபதியுமாகிய கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களால் நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாடநெறி இல -5 இன் பயிலிளவல் அதிகாரியாக 1987 இல் இலங்கை கடற்படையில் நிறைவேற்றுப் பிரிவில் சேர்ந்தார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியற் கல்லூரி கடற்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததன் பின்னர், அவர் 1989 இல் சப் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்பட்டார் மற்றும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தில் (பாதுகாப்பு ஆய்வுகள்) கௌரவத்துடன் பட்டம் பெற்றார்.

வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மூன்று முறை ரண சூரபதக்கம் விருதையும், அவரது களங்கமற்ற சேவை மற்றும் கடமையில் அர்ப்பணிப்பிற்காக உத்தமசேவபதக்கம் விருதையும் பெற்றுள்ளார். வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கொழும்பு ரோயல் கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவராவர்.