Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2022 04:30:41 Hours

பீஎஸ்சீ தகுதி பெற்ற அதிகாரிகள் தங்களது பட்டத்தினை பெற்றனர்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி இல-16 இன் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (08) பிற்பகல் நெலும் பொக்குண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது, இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார். சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி, முப்படைகளின் அதிகாரிகளுக்கான இராணுவக் கல்விக்கான மிக உயர்ந்த இடமாகும், மேலும் இது முப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் கற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. அரச துறையில் நாட்டின் நிர்வாக நடைமுறைகள் பற்றிய அறிவை வழங்கும் அதே வேளையில் கட்டளை மற்றும் பணிநிலைகள் குறித்த நியமனங்களுக்கு அவர்களை தயார்படுத்தும் நோக்கத்திற்காக இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பாதவி நிலைப் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களுடன் இணைந்து அன்றைய பிரதம அதிதியை நுழைவாயிலில் அன்புடன் வரவேற்றதைத் தொடர்ந்து, அவரை கேட்போர் கூடத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்ற பின்னர் அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பாடநெறி இல -16 ஆனது வங்கதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம், ஓமன், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல் மற்றும் ஷாம்பியா உட்பட 22 வெளிநாட்டவர்களுடன் , 149 இளங்கலை பட்டதாரிகள் இப்பாட நெறியில் கலந்து கொண்டிருந்தனர். 76

இராணுவம், 26 கடற்படை மற்றும் 25 விமானப்படை அதிகாரிகள் இந்தப் பாடநெறியில் 'தேர்ச்சியாளர் பதவிதாரிகள் கல்லூரி' (பிஎஸ்சி) பட்டப்படிப்பைப் பெற்றனர்,

இந்நாள் நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு அதிதிகளில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இராஜதந்திர தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரப் படையின் ஏனைய உறுப்பினர்கள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியி்ன் முகாமைத்துவ பேரவை உறுப்பினர்கள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ, கல்வித்துறையின் முன்னாள் உறுப்பினர்கள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர்கள் மற்றும் பட்டதாரிகளின் நெருங்கிய உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அன்றைய பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் தளபதி மேஜர் ஜெனரல் பீகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜி ஆகியோர் இந்த நிகழ்வின் போது கல்வியில் சிறந்து விளங்கிய அனைவருக்கும் சிறப்பு பாராட்டுகளை வழங்கி கௌரவித்தனர்.

பின்வரும் அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

1. மேஜர் எச்ஏஎம்பி குமார இலங்கை பொறியியல் படையணி

2. மேஜர் டபிள்யூஏசிஎன் கருணாதிலக்க இலங்கை இலேசாயுத காலாட் படையணி

3. பங்களதேஷ் கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் எஸ்ஐபீ பிரோஸ்

4. இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன் கமாண்டர் சீ கிருஷ்ணன்

5. பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த லெப்டினன் கமாண்டர் எஸ்எம் ஆசாத்

6. இலங்கை விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் கேஈஎன்டி குணரத்ன

7. இலங்கை விமானப்படையைச் சேர்ந்த ஸ்கெட்ரன் லீடர் எச்டபிள்யூஎன் வனசிங்க

தங்க பேனை விருது

பாடநெறியின் சிறந்த தளபதி ஆய்வுக் கட்டுரையை தயாரித்ததற்காக விருது வழங்கப்பட்டது

மேஜர் எச்ஏஎம்பி குமார (இலங்கை இராணுவம்)

தங்க ஒவ்ல் விருது

ஒவ்வொரு பிரிவிலும் தகுதி வரிசையில் முதலிடத்தைப் பெற்ற மிகச் சிறந்த பின்வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவ அதிகாரிகளுக்கு தங்க ஒவ்ல் விருது வழங்கப்பட்டது.

இராணுவம்

இலங்கை மாணவ அதிகாரி: மேஜர் எச்ஏஎம்பி குமார (இலங்கை இராணுவம்)

வெளிநாட்டு மாணவ அதிகாரி: மேஜர் பஹிம் ஹஸ்னைன் பீஎஸ்சி (வங்களதேசம் இராணுவம்)

கடற்படை

இலங்கை மாணவ அதிகாரி: லெப்டினன் கமாண்டர் (ஈ) கேகேடிஎம்டி கருணாரத்ன (இலங்கை கடற்படை)

வெளிநாட்டு மாணவ அதிகாரி: லெப்டினன் கமாண்டர் சீ கிருஷ்ணன் (இந்திய கடற்படை)

விமானப்படை

இலங்கை மாணவ அதிகாரி: ஸ்கெட்ரன் லீடர் எச்டபிள்யூஎன் வனசிங்க (இலங்கை விமானப்படை)

வெளிநாட்டு மாணவ அதிகாரி விங் கமாண்டர் யாசிர் முஸ்தபா (பாகிஸ்தான் விமானப்படை)