Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2023 12:55:01 Hours

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகளுக்கு உரை

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் திங்கட்கிழமை (நவம்பர் 27) பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகளைச் சந்தித்து அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நுழைவாயிலுக்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ ஆகியோர்களால் வரவேற்கப்படுவதற்கு முன்னர், மேற்குப் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், அவர் தனது உரையின் போது, மே 2009 க்கு முன்னர் உயிரிழந்த அனைத்து போர்வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தியதுடன், இலங்கை இராணுவத்தினரது தற்போதைய பங்கு மற்றும் பணிகளைப் பாராட்டினார்.

மேலும், இராணுவ நலன்புரி வசதிகள் குறித்து பேசிய அவர், அந்த வசதிகளை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.மேலும், இராணுவத்தின் நலன்புரி வசதிகள் குறித்து எடுத்துரைத்துடன், அந்த வசதிகளை அரசின் திறனுடன் மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

அவர் தனது உரையின் முடிவில், மேற்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்பாடு செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்ரின் உரையின் பின்னர், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் விஜயத்தின் நினைவாக விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

பின்னர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், அங்கு அனைவரிடமும் தனித்தனியாக உரையாடினார். அவர் புறப்படுவதற்கு முன், அதிதிகள் பதிவேட்டில் தனது பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டதுடன் குழு படம் எடுத்துகொண்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.