Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2022 14:18:32 Hours

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கு இராணுவ தலைமையகத்திற்கு அழைப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் இளங்கலை பட்டதாரிகள் குழுவொன்று தமது பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஐந்து நாள் நல்லெண்ண சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (7) இராணுவத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டது.

எயார் கொமடோர் அக்தர் இம்ரான் சட்டோசா அவர்களின் தலைமையிலான 17 பேர் கொண்ட தூதுக்குழுவினருக்கு இராணுவ தலைமையகத்தின் பயிற்சி பணிப்பகத்தின் கேணல் வெளிநாட்டு பயிற்சிகள் கேணல் சுதேஷ் ரத்நாயக்க அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டு பிரதி பாதுகாப்பு பதவிநிலை பிரதானியவர்களின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது இராணுவ தளபதியவர்களின் சார்பில் வருகை தந்த எயார் கொமடோர் அக்தர் இம்ரான் சட்டோசா அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகளுக்கு பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு பிரதிநிதிகள் குழுவிற்கு வரவேற்பளித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது இருநாட்டு படைகளுககுமிடையிலான அறிவு பரிமாற்றம் தொடர்பிலும், தொழில் மற்றும் புரிந்துணர்வு அடிப்படையிலான உறவுகள் ஆகியவற்றோடு, பயிற்சி செயற்பாடுகளை மேலும் வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களுடனான சினேகபூர்வமான மேற்படி சந்திப்பின் நிறைவில் வாழ்த்துக்களுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர், இராணுவத் தலைமையகத்தில் உள்ள பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கபில தோலகே அவர்களுடைய விளக்கமளிக்கும் அவர்வின் போது, போர்க்கால மனிதாபிமான நடவடிக்கை, பல்வேறு பாதுகாப்பு சவால்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் இராணுவத்தின் பங்களிப்பு உட்பட இராணுவத்த்தின் செயல்திறன் தன்மைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த அமர்வில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே, நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி குழுவினரின் வருகையின் நினைவம்சமாக இடம்பெற்ற குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானியவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். புதன்கிழமை (8) நடைபெறவுள்ள கலசார நிகழ்வொன்றின் போது இக்குழுவினர் இராணுவ தளபதியவர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.