Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2023 21:18:10 Hours

படையினரால் யாழ். எழைகளுக்கான 773 வது வீடு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் 521 வது காலாட் பிரிகேடின் 4 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் கனடாவில் உள்ள அனுசரணையாளர்களின் அனுசரணையுடன் பருத்தித்துறை தம்பிபுலம் அல்வாயில் தகுதியான குடும்பம் ஒன்றுக்கு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களில் நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் அனுசரணையாளர்களின் ஆதரவுடன் இராணுவத்தினரால் யாழ். பொதுமக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 773 வது வீடு இதுவாகும்.

மேஜர் ஜெனரல் ஆர் ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பில் ‘வன்னி எய்ட் கனடா’ அமைப்பின் ஊடாக கனடாவில் வசிக்கும் திருமதி தபிதா சின்னையா அவர்களின் அனுசரணையில் 52 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 521 வது காலாட் பிரிகேடின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 521 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் அழைப்பின் பேரில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) புதிய வீட்டை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதே அனுசரணையுடன் படையினர் பயனாளிக்கு புதிய தளபாடங்களையும் அதே சந்தர்ப்பத்தில் வழங்கினர்.

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 521 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எம்.எச்.ஆர் பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் இத் திட்டத்தை மேற்பார்வையிட்டனர்.