Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2023 23:10:13 Hours

படையணிகளுக்கிடையிலான போர் துப்பாக்கிச் சூட்டு போட்டி-2023 தியத்தலாவையில் நிறைவு

படையணிகளுக்கிடையிலான போர் துப்பாக்கிச் சூட்டு போட்டி - 2023 இன் பரிசளிப்பு நிகழ்வு புதன்கிழமை (நவம்பர் 22) இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி உடற்பயிற்சி கூடத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களுடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் ஆகியோர் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை முகாம் வளாகத்தில் வரவேற்றார்.

அதன்பின்னர் இறுதிப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பு குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையில் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு போட்டி-2023 இன் சிறப்பம்சங்கள் வீடியோ ஆவணப்படமாக காட்சிப்படுத்தப்பட்டது.

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் ஆகியோரால் இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதி பதவி நிலை பிரதானி அவர்கள் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றியதுடன் அவர்களின் சிறந்த சாதனைகளுக்காக அவர்களைப் பாராட்டினார்.

நிகழ்வின் இறுதியில், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம் அவர்கள் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜீ.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

அன்றைய நிகழ்வு நிறைவடைவதற்கு முன்னர், பிரதி பதவி நிலை பிரதானி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இராணுவ சிறு ஆயுத சங்கம் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த படையணிகளுக்கிடையிலான போர் துப்பாக்கிச் சூட்டு போட்டி-2023 நவம்பர் 7 முதல் நவம்பர் 16 வரை தியத்தலாவையில் உள்ள துப்பாக்கிச் சூட்டு களத்தில் நடைபெற்றது.

படையணிகளுக்கு இடையிலான போர் துப்பாக்கிச் சூட்டு போட்டி-2023 இல் படையணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 35 துப்பாக்கிச் சூட்டு அணிகள் (திறந்த மற்றும் புதியவர்கள்) பங்கேற்றன.

முடிவுகள் பின்வருமாறு:

1. திறந்த அணிகள்

அ. சாம்பியன் - கெமுனு ஹேவா படையணி

ஆ. இரண்டாம் இடம் - இலங்கை பீரங்கி படையணி

இ. மூன்றாம் இடம் -கொமாண்டோ படையணி

2. புதியவர்கள் அணி

அ. சாம்பியன் - கெமுனு ஹேவா படையணி

ஆ. இரண்டாம் இடம் - கொமாண்டோ படையணி

ஈ. மூன்றாம் இடம் - இலங்கை இலேசாயுத காலாட் படையணி

3 .சேவை படையணிகள்

அ. சாம்பியன் - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி

ஆ. இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ சேவைப் படையணி

இ. மூன்றாம் இடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

4.சிறந்த குறி பார்து சுடும் வீரர் - கோப்ரல் பீ.என் உபுல் 14 வது கெமுனு ஹேவா படையணி

5.சிறந்த கொடி நிலை அதிகாரி - பிரிகேடியர் ஆர்.பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ

6.சிறந்த சிரேஷ்ட அதிகாரி – கொமாண்டோ படையணியின் லெப்டினன் கேணல் ஏ.எம்.டி.என் அபயகோன் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ

7. சிறந்த துப்பாக்கி சூட்டு வீராங்கனை – லெப்டினன் டி.ஏ.எம்.டி தென்னகோன் இலங்கை இராணுவ மகளிர் படையணி.

8. திறந்த பிரிவில் சிறந்தவர் - 14 கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் பி.என் உபுல்

9. புதியவர் பிரிவில் சிறந்தவர் - இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லெப்டினன் எஸ்.எம்.பீ குணவர்தன

10. சேவை படையணியின் சிறந்த சூடு - இலங்கை மகளிர் படையணியின் லெப்டினன் டி.ஏ.எம்.டி தென்னகோன்