Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2022 15:08:26 Hours

படையணிகளுகிடையிலான கரப்பந்து சம்பியன்ஷிப் போட்டி - 2022 புதிய சாதனைகளுடன் நிறைவு

படையணிகளுக்கு இடையிலான கரப்பந்து சம்பியன்ஷிப் இறுதி போட்டி – 2022 திங்கட்கிழமை (31) பிற்பகல் பனாகொட இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் இடம் பெற்றது.

இலங்கை சிங்க படையணி மற்றும் இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி வீரர்களுக்கும் இடையிலான சுப்பர் லீக் போட்டியின் இறுதிப் போட்டிகளை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பார்வையிட்டார். பனாகொடையில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இப்போட்டி தொடரில் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 19 அணிகள் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் போட்டியிட்டன.

ஏனைய போட்டியாளர்களை தோற்கடித்து, இராணுவ போர் கருவிகள் படையணி இறுதியாக சூப்பர் லீக் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றது, இலங்கை சிங்க படையணி மற்றும் இலங்கை பீரங்கி படையணி இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தன.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு போட்டி நிறைவில் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இப் போட்டி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்கள் தலைமையில் இராணுவ கரப்பந்தாட்ட கழகத்தினால் போட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதிப் போட்டியில் பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் கரப்பந்து ரசிகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் வீரர்கள், போட்டியின் சிறப்பம்சமாக இறுதிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர், ‘ஏ’ பிரிவில் போட்டியிட்டனர்.

இலங்கை இராணுவ சேவைப் படை அணி ‘ஏ’ பிரிவு வெற்றி கிண்ணத்தை வென்றதுடன், இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் இலங்கை சமிஞ்சை படையணியினர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றன.

போட்டியாளர்களின் தனிப்பட்ட செயல்திறன்கள் பின்வருமாறு;

சிறந்த வீரர் - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி லான்ஸ் கோப்ரல் செல்வம் செல்வம்

சிறந்த அறைதல் வீரர் - இலங்கை சிங்க படையணியின் லான்ஸ் கோப்ரல் ஐ மதுஷன்

சிறந்த ஒழுங்குபடுதுனர்/சிறந்த தடுப்பாளர் - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி லான்ஸ் கோப்ரல் பிஎஸ் துஷாந்த

சிறந்த தடுப்பாளர் - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணியின் சிப்பாய் டீஜீ குமார

சிறந்த பந்து செலுத்துனர் - இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி லான்ஸ் கோப்ரல் செல்வம் செல்வம்